India
விடாமல் அழுத குழந்தை.. கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை - ஹரியானாவில் நேர்ந்த சோகம் !
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொண்டாடப்பட்ட ரக்ஷாபந்தன் தினத்தன்று தனது சகோதரருக்கு ராக்கி கட்டுவதற்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையும், கணவரும் உறங்கி கொண்டிருந்ததால் அவர் சொல்லாமல் சென்றுள்ளார்.
அப்போது இரவு சுமார் 9 மணியளவில் தூக்கத்தில் இருந்த குழந்தை அழுதுகொண்டே அம்மாவை தேடி அழைத்துள்ளது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த தனது அப்பாவையும் எழுப்பியுள்ளது. மேலும் தொடர்ந்து அந்த குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த தந்தை குழந்தையை அடித்துள்ளார்.
அப்படியும் விடாமல் அழுததால், அருகிலிருந்த தலையணையை எடுத்து குழந்தையின் முகத்தில் அழுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தை மூச்சுமுட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளது.
வெளியே சென்றிருந்த ப்ரியா, சிறிது நேரத்தில் அங்கே வந்து பார்த்தபோது, குழந்தை காது, மூக்கு, வாயில் இரத்தக்கசிவுடன் சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதையடுத்து பிரியா கதறி அழுத சத்தத்தை கேட்ட ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் குழந்தையை கொன்று விட்டு அவரது சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறிவுக்கு அனுப்பிவைத்ததோடு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறும்போது, "குழந்தை அழும் சத்தம் விடாமல் கேட்டது. ஆனால் சிறுது நேரத்தில் குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. எனவே குழந்தை மீண்டும் தூங்கி விட்டது என்று எண்ணினோம். ஆனால் குழந்தையின் தந்தை இப்படி ஒரு காரியத்தை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை" என்று வருத்தத்துடன் கூறினர்.
தூக்கத்தில் இருந்து எழுப்பியதால் தந்தையே குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!