India

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி : காற்றில் கரைந்த 80s kidsன் செய்தி குரல் !

80,90s kids-கள் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயசுவாமி என்ற பெயரைக் கேட்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர் பெயர் பரிட்சயம். காலை மாலை என எப்போது வானொலியில் செய்திகள் கேட்டாளும் இவரின் பெயரை அடுத்தே செய்திகள் வாசிக்கப்படும்.

இவரின் முகத்தை தற்போது எல்லோரும் மறந்திருக்கலாம். ஆனால் சரோஜ் நாராயண சுவாமி என்ற இந்த வார்த்தையை யாராலும் கடைசிவரை மறக்க முடியாது. அந்த அளவிற்கு 80,90s kids உள்ளங்களில் குடி கொண்டுள்ளார் இவர்.

இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயசுவாமி இன்று மும்பையில் காலமாகியுள்ளார். இவரின் இந்த இறப்புச் செய்தியைக் கேட்டு பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவருக்குப் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம். ஆனால் இவர் பிறந்தது மும்பையில். பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள அவர் தமிழில் செய்தி வாசித்துப் பிரபலமடைந்துள்ளார். 1962ம் ஆண்டு இவருக்கு அகில இந்திய வானொலி மையத்தில் வேலை கிடைத்தது. அன்றையில் இருந்து தனது ஓய்வுநாள் வரை தனது காந்த குரலால் தொடர்ந்து செய்திகளை வாசித்துக் கொண்டே இருந்தார்.

இவருக்கு 2008ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறப்புச் செய்தியை வானொலியில் தெரியப்படுத்திய குரல் சரோஜ் நாராயண சுவாமியுடையதுதான். மேலும் பிரதமர் இந்திரா காந்தி என்பதற்குப் பதிலாக அன்னை இந்திரா காந்தி என மாற்றி செய்தி வாசித்து அனைவர் பாராட்டையும் பெற்றார்.

35 ஆண்டுகள் வானொலியில் பணிபுரிந்த பிறகும் ஒளிபரப்புத்துறைக்கு பங்களித்து வந்தார். தமிழ்ப் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள், செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்குக் குரல் கொடுத்து வந்தார். இப்படி தனது குரலால் அனைவரையும் இவர் இன்று நம்மை விட்டு காற்றில் கரைந்துவிட்டார்.

Also Read: இனி வாடகை வீட்டிற்கு 18% GST வரி விதிப்பா?.. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது என்ன?