India
பிகினியுடன் இன்ஸ்டாவில் புகைப்படம்.. வேலையை இழந்த பெண் பேராசிரியர்..ரூ.99 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் !
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புனித சேவியர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவரின் பெற்றோர் பல்கலைக்கழகத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளனர். அதில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பிகினி அணிந்து புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறியுள்ளார்.
மேலும், பாடம் நடத்தும் பேராசிரியையின் செயலால் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், பேராசிரியர் இதுபோன்ற ஆடையை அணிவது ஆபாசமானது, மோசமானது மற்றும் முறையற்றது என்றும் கூறியுள்ளார். அதோடு அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட பேராசிரியர் பணியிலிருந்து ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது பல்கலைக்கழக நிருவாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கல்லூரிக்கு அவப்பெயர் பெற்றுத்தந்ததால் பேராசிரியர் இழப்பீடாக ரூ.99 கோடி தரவேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பல்கலைக்கழக பேராசிரியர் . அந்த புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவேற்றப்பட்டது என்றும், அது பதிவேற்றிய 24 மணி நேரத்தில் காணாமல் போகும் அம்சம் என்றும் கூறியிருந்தார்.
மேலும், "நான் ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு நான் நீச்சலுடையில் புகைப்படங்களை பதிவேற்றியிருந்தேன், அது சட்டப்படி தவறல்ல என்றும் பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தவிர பல்கலைக்கழகத்தின் மேலும் அவர் புகார் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் தனது புகைப்படத்தை ப்ரின்ட்அவுட் எடுத்து என்னிடம் காட்டினார்கள் என்றும், ஒருவரின் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை எடுப்பதும்,அதை இதுபோன்று செய்வதும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும் என்றும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடராயிருப்பதாகவும் கூறியுள்ளது.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?