India
கணவனை வீட்டுக்குள் புதைத்த மனைவி.. சினிமா பணியில் உ.பி-யில் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன ?
உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பி. இவர் தனது கணவர் கோவிந்த், அவரது தம்பி மற்றும் 3 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கணவனுக்கு குடிப்பழக்கம் இருக்கும் நிலையில், அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷில்பிக்கும் அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் கோவிந்த் கீழே படுத்து தூங்க, மனைவி மேலே தூங்கியுள்ளார். பின்னர் மனைவி எதேர்ச்சியாக வந்து பார்க்கையில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து பயந்துபோன மனைவி கணவனை வீட்டின் பெட்ரூமில் ஒரு குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளார். மறுநாள் காலை கணவனை காணும் என்று நாடகமாடியுள்ளார். பின்னர் கணவர் காணவில்லை என்று காவல் நிலையத்தில் கணவரின் தம்பி புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுவதில் சந்தேகமடைந்த கணவரின் தம்பி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது கணவர் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடலை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து மனைவி ஷில்பியிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கும் தனது கணவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது என்றும், அந்த சண்டையின் காரணமாக அவர் தூக்கில் தொங்கி விட்டார் என்றும் கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். மேலும் அவர்களது குழந்தைகளிடம் விசாரித்த போது, ஒரு குழந்தை இருவரும் சண்டைபோட்டுகொண்டாதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்திற்கும் ஷில்பிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறையினர், உடற்கூறாய்வு முடிவு வெளியான பிறகே எதையும் கூறமுடியும் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!