India

"பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் 'பகவத் கீதை' கட்டாயம்.." - மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறு வருகிறது. இங்கு எதிர்க்கட்சியாக பா.ஜ.க இருந்து வரும் நிலையில், சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி இருந்து வருகிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருந்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

இந்த நிலையில், நேற்று புற்பா மெதினிபூர் என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. மேலும் இதில், பொதுமக்களுக்கு பகவத் கீதை புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க தலைவரும், அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி பேசுகையில், "கீதை ஒரு மதம் சார்ந்த நூல் மட்டுமல்ல. குஜராத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் மக்களின் ஆசியுடன் தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தால், பள்ளிகளில் கீதையை போதிப்போம்" என்கிறார்.

முன்னதாக, குஜராத் மாநில பள்ளிகளில் 6 - 12-ம் வரை பயிலும் மாணவர்களுக்கு பகவத் கீதையை போதிக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து, சுற்றறிக்கையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பகவத் கீதையை பள்ளி படத்தில் சேர்ப்பது குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “உச்சநீதிமன்ற கிளை.. உயர்நீதிமன்றத்தில் ‘தமிழ்’ வழக்காடு மொழியாக வரவேண்டும்” : முதல்வர் வைத்த கோரிக்கை!