India
'நள்ளிரவு 2 மணிக்கு டிராலியை இழுத்துச்சென்ற இளம்பெண்' -திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த போலிஸ் !
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஒரு பெண் பெரிய பெட்டியை இழுத்து சாலையில் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது தான் இரயில் நிலையத்திற்கு செல்வதாக அந்த பெண் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த நேரத்தில் ஆட்டோ கிடைக்காது என்றும், தாங்கள் கொண்டு போய் விடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே பெண்ணோ, காவல்துறையினருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து பெட்டியை இழுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். இருப்பினும் அவரை பின் தொடர்ந்த காவல்துறையினர் மீண்டும் அந்த பெண்ணிடம் இரயில் நிலையத்திற்கு கூட்டி செல்வதாக கூறியும், அதனையும் அந்த பெண் மறுத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும், எத்தனை மணி இரயில் என்று விசாரித்துள்ளனர். ஆனால் அந்த பெண் அதற்கு சரிவர பதில் கூறவில்லை. இரயில் என்பதால் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் ஒரு சடலம் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதாவது அந்த பெண் பெயர் பிரீத்தி சர்மா. இவருக்கு திருமணமாகி அவரது கணவரை பிரிந்து தற்போது வாழ்ந்து வருகிறார்.
பிறகு இவருக்கு பெரோஸ் என்ற 23 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். சில நாட்களில் அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பெரோஸிடம் கூறியுள்ளார். அதற்கு மதத்தை காரணம் காட்டி பெரோஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் பெரோஸிடம் திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெரோஸ் அந்த பெண்ணிடம் நடத்தையை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த பிளேடை கொண்டு பேராசான் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை மறைக்க வேண்டும் என்று பெரிய பெட்டியில் அவரை அடைத்து இரயில் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். ஆனால் அங்கே காவல்துறையினரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். பெட்டிக்குள் காதலன் சடலத்தை எடுத்து வந்த இளம்பெண்ணின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!