India
“2 செயற்கைக்கோள்களின் சிக்னல் திடீர் துண்டிப்பு” - SSLV ராக்கெட் நிலை தெரியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி !
இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இதற்கான கவுனட்டவுன் இன்று காலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில் இன்று காலையில் சுமார் 9.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த எஸ்.எஸ்.எல்.வி- டி1 ராக்கெட்டில் இ.ஓ.எஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 120 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்வது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!