India
கர்நாடகாவை உலுக்கிய 5 கொலைகள்.. 2 மாத தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய சீரியல் கில்லர்!
கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் கடந்த ஜூன் 8ம் தேதி உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலிஸார் கண்டெடுத்தனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே அரக்கேரா என்ற கிராமத்தில வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலத்தை போலிஸார் மீட்டுள்ளனர். இந்த இரண்டு கொலைகளும் ஒரே மாதரி இருந்ததால் போலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்களை யார் கொலை செய்தனர்?, யார் இந்த பெண்கள் என தனிப்படை அமைத்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் மே மாதம் இதேபோன்று ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் இந்த மூன்று கொலைகள் கர்நாடக போலிஸாருக்கு ஒரு சவாலான விஷயமாக மாறியது. கொலைகள் குறித்து தும்பு துளக்க முடியாமல் இருந்தனர். இதையடுத்து மூன்று கொலைகள் நடந்த பகுதிகளில் செல்போன் சிக்னல் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் ஒருவரது செல்போன் எண் மட்டுமே மூன்று இடத்திலும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த செல்போனுக்கு சொந்தக்காரரான சித்தலிங்கப்பா என்பவரை போலிஸார் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சித்தலிங்கப்பாவுக்கு சந்திரகலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்தான் தான் பாலியல் தொழிலுக்கு வர இந்த பெண்கள்தான் காரணம் என சித்தலிங்கப்பாவிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் சேர்ந்த அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து சித்தலிங்கப்பாவுக்கு அந்த பெண்களை அறிமுகம் செய்துள்ளார். அவர்களுடன் அவர் பழகிவந்துள்ளார். பின்னர் தாங்கள் திட்டமிட்டபடி அந்த பெண்களைக் கொலை செய்து அவர்களது உடலைத் துண்டாக வெட்டி மாண்டியாவில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலைகள் குறித்து விசாரணை நடத்தினால் சந்திரகலா உண்மையைச் சொல்லிவிடக் கூடும் என நினைத்த சித்தலிங்கப்பா அவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில்தான் அவர் போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 5 பெண்களை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சீரியல் கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!