India
'அப்பு எக்ஸ்பிரஸ்' : புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸை நன்கொடையாக அளித்த நடிகர் பிரகாஷ்ராஜ்..
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ஏரளமான கன்னட ரசிகர்களை கொண்ட இவர், சமூக சேவைகளும் செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். வெறும் 46-வது வயதில் இவர் காலமானது ரசிகர்களிடமும், திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது மறைவை போற்றும்விதமாக கன்னட திரை ரசிகர்களும், கர்நாடக அரசும் பல்வேறு விஷயங்களை செய்தனர். அதன் ஒரு பங்காக ஒரு தெருவிற்கு இவர் பெயர் சூட்டப்பட்டது. மேலும் இவருக்கு கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடக ரத்னா விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உதயமான நவம்பர் 1-ம் தேதி புனித் ராஜ்குமாருக்கு அந்த விருதை மாநில அரசு வழங்க உள்ளது.
இதனிடையே இவரது இறுதி படமான 'ஜேம்ஸ்' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு திறன்களை கொண்ட புனித் ராஜ்குமார், அனைவராலும் 'அப்பு' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த ஆம்புலன்ஸூக்கு 'அப்பு' என்ற புனித் ராஜ்குமாரின் அடைமொழி இணைக்கப்பட்டு, 'அப்பு எக்ஸ்பிரஸ்' என்று இந்த ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சி நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!