India
இந்தியை திணிக்கிறது பா.ஜ.க : தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. பாடம் எடுத்த கன்னட மீடியா !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தின விழா ஆண்டையொட்டி ஒன்றிய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒன்றிய உள்துறையமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேனர் முழுவதும் இந்தியில் இடம்பெற்றிருந்தது.
இதன் மூலம் ஒன்றிய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனை குறிபிட்டு கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவும் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்த இணையவாசிகளும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த அரசியல்கட்சிகள் இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் கன்னடத்தை புறக்கணித்து இந்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றனரா? என் கர்நாடக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும்,thepublicspot.com என்ற செய்தி நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அங்கு எந்த இடத்திலும் இந்தி இடம்பெறவில்லை. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தியில் பேசவில்லை. அவர் ஆங்கிலத்தில் தான் உரையாற்றினார். விழா மேடைகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் நிறைந்து இருந்தன.
ஆனால் அதே கர்நாடகாவில் அமித்ஷா உள்பட மேலிட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திக்கு மொழிக்கு பிரதான இடம் வழங்கப்படுகிறது. இதனால் பா.ஜ.க.வினரே இந்தி திணிப்பை முன்னெடுக்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் எந்த காரணத்தை கொண்டு வெல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டில் இந்தி பற்றி பா.ஜ.க தலைவர்கள் பேசுவது இல்லை. கர்நாடகாவில் மட்டும் தான் இந்தி பற்றி பேசுகின்றனர். இதற்கு கன்னட மக்கள் தான் தக்க பதில் கொடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!