India
CCTV கேமராக்களை Off செய்து தேர்வில் மோசடி செய்த குஜராத் பயிற்சி மையங்கள் - விரைவில் தொடங்கும் கைது படலம்?
பொதுவாக அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கிலம் பேசக்கூடிய வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS எனப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால், அங்குள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும். இந்த தேர்விற்கான பயிற்சி மையங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் இந்த பயிற்சி மையக்கிளையில் பலரும் பயிற்சி பெற்று வந்தனர். அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற IELTS தேர்வில் பலரும் தேர்ச்சி பெற்று வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் கனடா நாட்டிற்கு சென்ற குஜராத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தனர். இதனை கண்டுபிடித்த அமெரிக்க காவல் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களிடம் நீதிபதிகள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அப்போது அவர்களால் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. இதனால் அவர்களுக்கு மொழிபெயர்பாளர்கள் அமைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் 6 பேரும், இந்தியா-குஜராத்தில் இருந்து வந்ததும், கனடா நாட்டில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நீதிபதி அவர்களிடம் IELTS நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக பதிலளித்தனர். ஆனால் பிறகு ஏன் உங்களால் சரிவர ஆங்கிலத்தில் பேச இயலவில்லை என்று மாறி மாறி கேள்வி கேட்டதால், தாங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர், இது தொடர்பாக அமெரிக்க துணை தூதரகம் மூலம் குஜராத் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குஜராத் அதிகாரிகள் அங்கிருந்த அனைத்து IELTS பயிற்சி மையங்களில் சோதனை நடத்தினர். மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடைபெற்ற IELTS தேர்வில், சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்து விட்டு ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது போல், வெளிநாடு செல்வற்தாக அந்த பயிற்சி மையத்தில் பயின்ற ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூ.14 லட்சம் வரை லஞ்சம் பெற்று IELTS சான்றிதழை முறைகேடாக அந்த மையங்கள் கொடுத்துள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த பயிற்சி மையங்களில் தேர்ச்சி பெற்ற 950 பேரின் தகுதி பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!