India
'காத்திருந்து பழி வாங்கும் பாம்பு..?' - அண்ணன் இறுதி சடங்கிற்கு சென்ற தம்பிக்கு நேர்ந்த துயரம் !
உத்தர பிரதேச மாநிலம் பவானிபூர் பகுதியில் வசித்து வந்தவர் அரவிந்த் மிசாரா (வயது 38). இவரை கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்ததும் பலனளிக்காததால், பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அரவிந்தின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை (நேற்று) இறுதி சடங்கு நடைபெற்று முடிந்தது. அண்ணனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு அவரது தம்பி கோவிந்த் மிசாரா கடந்த புதன்கிழமை வந்தார்.
இந்த நிலையில், நேற்று அனைத்து காரியங்களும் முடிந்த பிறகு கோவிந்த் இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவரையும் பாம்பு தீண்டியதால் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் - தம்பி இருவரையும் பாம்பு கடித்து இறந்ததால், பாம்பு காத்திருந்து பழி வாங்குவதாக கிசுகிசுக்க படுகிறது.
இதனிடையே தகவல் அறிந்த மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பு கடித்து இறந்தவரை பார்க்க சென்ற தம்பி, பாம்பு கடித்து இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?