India
விடாமல் துரத்தும் காகங்கள்.. செத்ததை எடுத்துப்போட்டது குத்தமா.. கர்நாடக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !
கர்நாடகாவில், தாவணகரே மாவட்டம், சிக்கமல்லனஹொளே என்ற பகுதியை சேர்ந்தவர் பசம்மா (வயது 55). கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது வீட்டு முன்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் அமைந்த காகம் ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கீழே விழுந்துள்ளது.
கீழே இறந்து கிடந்த காகத்தை கையில் எடுத்த அவர் ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியுள்ளார். அந்த தருணம் முதல் அவருக்கு பெரும் ஆபத்து தொடங்கியுள்ளது.
அடுத்த நாள் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை சில காகங்கள் விரட்டி கொத்தியுள்ளனர். முதலில் இதை சாதாரணமாக அவர் நினைத்த நிலையில் தினமும் இந்த சம்பவம் நடந்துள்ளது. காகங்கள் அவரை கண்டாலே அவர் தலையில் கொத்தி சுற்றி சுற்றி வருகின்றன.
அவர் வெளியே சென்றாலும் காகங்கள் விடாமல் பின்தொடர்ந்து அவரை கொத்துகின்றன. இதன் காரணமாக அவர் தனது வீட்டை விட்டு வெளியே வருவதையே தவிர்த்து வருகிறார். மேலும் இதில் இருந்து தப்பிக்க அங்குள்ள கோவிலில் பூஜை செய்தும் இந்த நிலை அவருக்கு தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், எங்கள் வீட்டின் முன் இருக்கும் மின் கம்பங்களில் நிறைய காகங்கள் செத்து விழுந்துள்ளது. அதை எடுத்து போட்டபோது ஏதும் நேரவில்லை. ஆனால் இந்த முறை அதை செய்தபோது காகத்தை நான்தான் கொன்றேன் என்று காகங்கள் என்னை விடாமல் துரத்துகிறது.
இதனால் நான் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கையில் காம்பை எடுத்து வரவேண்டியுள்ளது. இதிலிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என விரக்தியோடு கூறியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !