India

கதறி அழுது, தலைமுடியை பிய்த்துகொண்ட பள்ளி மாணவிகள்.. பேய் பிடித்ததாக அச்சம்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உலாரைக்குழி என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திடீர் என சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமைந்து தலை முடியை பிடித்து இழுத்து அழுவதும், கீழே விழுந்து கோஷமிட்டும் வந்துள்ளனர்.

அவர்களுக்கு பேய் பிடித்துள்ளது என நினைத்த பள்ளி நிர்வாகிகள் மந்திரவாதி ஒருவரை அழைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவிகள் மீண்டும் அதேபோல நடந்து கொள்வதால் பள்ளி நிர்வாகம் தரப்பில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல மாணவிகள் நடந்துகொள்வது பார்ப்பவர் நெஞ்சத்தை அதிரவைத்துள்ளது.

இது தொடர்பாக கூறியுள்ள ஊர் பொதுமக்கள், வீட்டில் சகஜமாக இருக்கும் மாணவிகள் பள்ளிக்கு சென்றதும் இப்படி விசித்திரமாக நடந்துகொள்வதாக கூறியுள்ளனர். மேலும் நன்கு படிக்கும் மாணவிகள் கூட பள்ளிக்கு சென்றால் வகுப்புக்கு செல்லாமல் இப்படி அங்கும் இங்கும் ஓடி திரிவதாக கூறியுள்ளனர்.

அதேநேரம் இவர்களுக்கு எல்லாம் 'மாஸ் ஹிஸ்டிரியா' என்ற கூட்டு பாதிப்பு இருக்க கூடும் என்று மருத்துவர்கள் சிலர் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒரே மதிய உணவு அருந்துவதால் அதில் ஏதும் பாதிப்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மாணவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் கொடுத்த பல்கலைக்கழகம்.. வடமாநில கல்வித்துறையின் லட்சணம் இதுதானா ?