India
ரெண்டு வேளை சோறு கிடைக்குதா.. அதுக்கே மோடிக்கு நீங்க நன்றி சொல்லணும் - BJP MP ஆணவப் பேச்சு !
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி மொத்தம் 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்துக்கு பணிந்து எம்.பிக்கள் மீதான நடவடிக்கை திரும்பபெறப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலை வாசி உயர்வு,பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை குறித்து விவாதிக்க வலியுறுத்தி தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்த விவாதம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே, "இலங்கை,பூடான், வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி உயர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
அப்படியிருக்கையில் இந்தியாவில் ஏழைகள் 2 வேளை இலவச உணவு உண்கிறார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு எழுப்பிய நிலையில், பொதுவெளியிலும் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!