India
சிறுவனின் காதை கடித்து துப்பிய பிட்புல் நாய்.. உரிமையாளரின் அலட்சியத்தால் நேர்ந்த துயர சம்பவம் !
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் சுசீலா திரிபாதி (வயது 82). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், ஜிம் பயிற்சியாளரான தனது மகன் அமீத் என்பவருடன் வசித்து வந்துள்ளார். அமீத் தனது வீட்டில் பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர் ரக 2 நாய்களை வளர்த்து வந்தார்.
இதில் இவரின் பிட்புல் நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தனியே இருந்த சுசீலாவை பிட்புல் நாய், சரமாரியாக கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சுசீலா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்வு அடங்குவதற்குள் தற்போது பிட்புல் ரக நாயால் மற்றொரு கொடும் சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்லி பான் சிங் கிராமத்தை சேர்ந்த ஒருவர் பிட்புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அந்த நாயின் உரிமையாளர் நாயோடு வாசலில் இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டு வாசல் அருகே தந்தையும் 13 வயது சிறுவனும் தங்கள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த போது நாய் அந்த சிறுவனை பார்த்து குறைத்துள்ளது. அப்போது உரிமையாளர் தற்செயலாக நாயின் கயிற்றை விடுவித்த நிலையில் நாய் சிறுவன் மேல் பாய்ந்து அவன் காதை கடித்துள்ளது.
நாயின் உரிமையாளரும், சிறுவனின் தந்தையும் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் நாயை சிறுவனிடமிருந்து விடுவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவனின் காதை நாய் தனியே கடித்து துப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக படாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?