India
“இறந்தவர்களுக்கு 30 ஆண்டுகள் கழித்து திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள்” : ‘பிரேத கல்யாணம்’ பற்றி தெரியுமா?
மணமக்கள் இறந்து 30 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் கடலோர மாவட்டமான மங்களூரு மாவட்டத்தில் ஆடி அமாவசை இரவில் நடைபெறும் பிரேதங்களுக்கான திருமண நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்த திருமணம் ஆடி மாதத்தின் அமாவாசையன்று மட்டுமே நடக்கிறது. இந்த திருமணத்திற்கான காரணம் என்னவென்று பார்த்தால், குடும்பத்தில் திருமண வயதுக்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் ஏதாவதொரு காரணமாக உயிரிழந்து விட்டால், அவர்களுக்கு அந்த வயதில் திருமணம் முடியாமல் வாழ்க்கை இறுதியாகி விடுகிறது.
ஒரு வேளை உயிருடன் இருந்திருந்தால் எவ்வாறு திருமணம்நடைபெறுமோ அதுபோன்று நினைத்து நினைவாக திருமணத்தை நடத்திவிடுவதை வழக்கமாக்கியுள்ளனர். கடலோர மாவட்டமான தட்சின கன்னடா மாவட்டத்தில் ஆடி மாத அமாவாசை இரவில் இந்த திருமண நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இது போன்ற திருமண நிகழ்வுகளுக்கு உறவினர்கள் வரவழைக்கப்படு, அதேபோல இந்த திருமணம் நடைபெறும் 2 மாதங்களுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்த விழாவையும் நடத்தியுள்ளனர். இதுபோல திருமணம் கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளில் சில பகுதிகளில் இன்றும் வழக்கமாகவுள்ளது.
அன்னி அருண் என்ற யூடியூபர் சிறுவயதில் இறந்த ஷோபாவுக்கும், சாந்தப்பாவுக்கும் நடந்த பிரேத கல்யாணத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”இன்று நான் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் நடக்கும் பெண் இறந்து விட்டார். மாப்பிள்ளையும் இறந்து போனவர்தான். 30 வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்களுக்கு இப்போது திருமணம் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!