India
ஒரே குடும்பத்தில் நான்கு IAS அதிகாரிகள்.. விடாமுயற்சியால் அசத்திய சகோதர, சகோதரிகள்..
உத்தர பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவருக்கு இரண்டு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் இருக்கும் கிராமின் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், தனது 4 பிள்ளைகளையும் சிறந்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்தார். மேலும் அவர்களுக்கு IAS தேர்வின் முக்கியத்துவத்தை பற்றியும் கூறி அதற்கும் தயாராகுமாறு அனைவரையும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி மூத்த மகனான யோகேஷ் மிஸ்ரா, அங்கிருக்கும் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு, நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே UPSC தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஒரு IAS அதிகாரியாகப் இருந்து வருகிறார்.
இதையடுத்து இரண்டாவது மகளான ஷமா மிஸ்ரா, கல்லூரி படித்து முடித்த பிறகு 3 முறை UPSC எழுதியுள்ளார். ஆனால் அந்த தேர்வுகளில் தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளராத ஷமா, 4 வது முறையும் எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது ஒரு IPS அதிகாரியாக இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது மகளான மாதுரி மிஸ்ரா, அலகாபாத்தில் படித்துக்கொண்டே கடந்த 2014 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்றார். தற்போது ஜார்கண்ட் கேடரில் இருந்து வருகிறார். இவர்களைத்தொடர்ந்து 4-வது மகனான லோகேஷ் மிஸ்ராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 44 வது ரேங்கில் வெற்றி பெற்று, தற்போது பீகார் கேடரில் இருந்து வருகிறார்.
இப்படி ஒரே குடும்பத்தில் தனது 4 பிள்ளைகளும் IAS அதிகாரகரிகளாக இருப்பது குறித்து அவர்களது தந்தை அனில் பிரகாஷ் மிஸ்ரா கூறும்போது, "எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும் ? நான் இன்று என் பிள்ளைகளால் தலைநிமிர்ந்து நிற்கிறேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!