India
'உ.பி எல்லாம் சும்மா.. நாங்க அதைவிட அதிகமா என்கவுண்டர் பண்ணுவோம்’: கர்நாடக பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
கர்நாடகா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகா மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவதை போன்று நாங்களும் பயன்படுத்துவோம் என கூறினார். இவரின் இந்த பேச்சு ஏற்கனவே பதற்றமாக இருக்கும் சூழ்நிலையில் இதை இன்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணணும் இதேபோன்ற கருத்தை பேசியிருப்பது கர்நாடகாவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண்," வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உத்தர பிரதேச மாதிரிகளை பயன்படுத்தப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். நாம் ஏன் உத்தர பிரதேசத்தை பின்பற்ற வேண்டும்.
இவர்களை விட ஐந்து மடங்கு சென்று குற்றத்தில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்யலாம். இப்போது இதான் இப்படியான சம்பவங்கள் நடக்காது" என தெரிவித்துள்ளார். கர்நாடக அமைச்சரின் இந்த மிரட்டல் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!