India

சமூக நீதி உரிமைக்கு ஆபத்து?.. தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனையுடன் பேசியது என்ன?

டெல்லியில் மாவட்ட சட்ட ஆணையத்தின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற மாநாட்டில் பேசிய தலைநீதிபதி என்.வி.ரமணா, அரசியல் சாசனம் அளித்துள்ள சமூக நீதி உரிமையை நீதி துறையினரால் நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய தலைமை நீதிபதி ரமணா, "அரசியல் சாசனம் அளித்துள்ள சமூக நீதி உரிமையை நீதி துறையினரால் நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சம் உள்ளது.

அதுகுறித்து அனைவரும் விவாதிக்க வேண்டும், விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். நீதித்துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மறைப்பது அர்த்தமற்றது. அவற்றை இன்று விவாதிக்காவிட்டால் நீதித்துறை முடங்கிவிடும்.

அரசியல் சாசன முகவுரையிலேயே சமூக நீதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் தொகையில் ஒரு சிறு விழுக்காடு மட்டுமே நீதிமன்றங்களை நாட முடிகிறது. பெரும்பாலான மக்கள் மௌனமாகவும், விழிப்புணர்வு இன்றியும் உள்ளனர்.

ஜனநாயகம் என்பது அனைவருக்கும் அனைத்திலும் இடம் வழங்குவதாக அமைய வேண்டும். சமூக விடுதலைக்கான ஒரு கருவிதான் நீதித்துறை. அது அனைவருக்கும் இலகுவாகக் கிடைப்பதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

Also Read: காதலி இறந்த துக்கத்தில் காதலன் எடுத்த விபரீத முடிவு.. கடைசியாக வாலிபர் அனுப்பிய WhatsApp மெசேஜ்!