India

50 calls.. விடாமல் அமைச்சருக்கு டார்ச்சர் கொடுத்த லோன் ஆப் கும்பல்: தட்டிதூக்கிய போலிஸ்!

இந்தியாவில் இணையத்தில் கிடைக்கும் லோன் ஆப்-களில் பலர் கடன் வாங்கி வருகின்றனர். இப்படி கடன் வாங்கியவர்களை மீண்டும் தவணை பணத்தைக் கொடுக்கும்படி கேட்டு அவர்களின் தொலைபேசிகளுக்கு ஆபாசமாகப் பேசி மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த லோன் ஆப்-கள் மீது பல்வேறு மாநிலங்களிலும் புகார்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநில அமைச்சருக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த லோன் ஆப் நிர்வாகிகளை போலிஸார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநில விவசாயத்துறை அமைச்சராக இருப்பர் காக்கானி கோவர்தன். இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அந்த நபர் அசோக் என்பவர் எங்களிடம் ரூ.9 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனுக்காக மாதத்தவனை தொகையை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் அசோக் என்ற பெயரில் எனக்கு யாரும் தெரியாது எனது கூறியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து அந்த நபர் மீண்டும் மீண்டும் அமைச்சருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இவரின் தொல்லையால் அமைச்சர் அவரின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

இருப்பினும் அந்த நபர் மற்றொரு எண்ணில் அமைச்சரைத் தொடர்பு கொண்டும் பணம் கேட்டுள்ளார். இப்படிக் கிட்டத்தட்ட 50 அழைப்புகள் வந்துள்ளது. இதனால் கடுப்பான அமைச்சர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை செய்தபோது, சென்னையில் உள்ள ஒரு கும்பல் லோன் ஆப் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை வந்த நெல்லூர் போலிஸார் அந்த கும்பலைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..