India
காரில் முழுவதும் பணம்.. நடிகையின் 4 கார்களுக்கு வலைவீச்சு : மேற்கு வங்க அமைச்சர் ஊழலில் திருப்பம் !
கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற மமதா ஆட்சியில், கல்வியமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. தற்போது நடைபெறு மமதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தப்பட்டது.
அப்போது நடைபெற்ற நியமனத்தில் ஊழல் நடந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. மேலும் இதில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அமலாக்கத்துறையும் இவ்வழக்குத் தொடர்பாக விசாரணையில் இறங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது, அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ.50 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட பணம் குறித்து அமைச்சரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அமைச்சரும், அர்பிதா முகர்ஜீயும் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் கைதானதை தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து பதிவியில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் அர்பிதாவுக்கு சொந்தமான கார்களில் மீதி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதனால், அர்பிதாவுக்கு சொந்தமான ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய 4 கார்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதோடு அர்பிதா பெயரில் சில அபார்ட்மெண்ட் இருப்பதாகவும், அது தொடர்பான பாத்திரங்களை ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்