India
1% மக்களுக்கு கூட வேலை கொடுக்க முடியாத ஒன்றிய அரசு.. வெளிச்சத்துக்கு வந்த மோடியின் பொய் வாக்குறுதி!
ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்துமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளாகியும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டங்கள் குறையவில்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் வேலைவாய்ப்பின்மை பேசுபொருளாகக் கூடாது என்பதற்காகவே இந்த மெகா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பாஜகவை சேர்ந்த வருண் காந்தி எம்.பி. ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவதுதானே நாம் கொடுத்த வாக்குறுதி ! அது என்ன ஆனது? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், 2014-15 முதல் 2021-22 ஆண்டு வரை எத்தனை ஒன்றிய பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
அதில், கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு பணிகளுக்கு 22 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் விண்ணப்பித்தவர்களில் 1 %க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 8 ஆண்டில் 7 லட்சம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசு வேலை கிடைத்த நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை மோடி அறிவித்துள்ளது தேர்தல் நாடகம் என்று இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!