India
பண்ணை வீட்டில் பாலியல் தொழில்.. கைப்பற்றப்பட்ட கணக்கில்லாத ஆணுறைகள் - தப்பிக்க முயன்ற பாஜக தலைவர் கைது!
மேகாலயா மாநில பா.ஜ.க.வின் துணைத் தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு. இவருக்கு மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதாகவும் அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முதலில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளில் வீடு என்பதால் போலிஸார் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பின்னர் தொடர் அழுத்தம் காரணமாக மராக் ரிம்பு பண்ணை வீட்டில், தனிப்படை போலிஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேரை மீட்ட போலிஸார் அவர்களை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் பண்ணை வீட்டை பூட்டில் சீல் வைத்தனர். மேலும் குழந்தைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் உட்பட 73 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் போது, மராக் ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொழில் செய்வற்காகவே விடுதி போல நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, மதுபான பாட்டில், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து பாக்கெட் கணக்கில் ஆணுறை கைப்பற்றப்பட்டுள்ளதும் போலிஸாரின் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.
இந்த குற்றசாட்டு எழுந்ததும் தலைமறைவாக இருந்த பெர்னார்டை பிடிக்க பல்வேறு முயற்சி மேற்கொண்டு வந்தனர். மேகாலயா மாநிலத்தின் துராவில் உள்ள நீதிமன்றம் பெர்னார்ட்க்குக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத கைது வாரன்டைப் பிறப்பித்தது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் அம்மாநில போலிஸார் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த பெர்னார்டை போலிஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெர்னார்ட் மரக்குக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என அம்மாநில பா.ஜ.க கூறியுள்ளது. மேலும் அவரை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
மாநில பா.ஜ.க.வின் இந்த செயற்பாட்டுக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தனை ஆதாரங்களோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காப்பாற்ற பா.ஜ.க முயல்வது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!