India

"இதை செய்தால் உங்களை புலிகள் வேட்டையாடும், யானைகள் மிதிக்கும்" - பா.ஜ.கவுக்கு மம்தா எச்சரிக்கை !

மேற்கு வங்க மாநில கல்வியமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார்.அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற நியமனத்தில் ஊழல் நடந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக திடீரென்று அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது அவரது உதவியாளரான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் இருந்து ரூ.20 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனியார் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவமனையில் பார்த்தாவை அனுமதித்ததற்கான உள்நோக்கம் என்ன? மத்திய அரசு அப்பாவி என்று மாநில அரசுகள் திருடர்கள் என்றும் நினைக்கிறீர்களா? இந்த முறை மகாராஷ்டிராவால் உங்களை எதிர்த்து சண்டையிட முடியவில்லை.

மகாராஷ்டிராவை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். இங்கு வருவதற்கு நீங்கள் வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும். அங்குள்ள முதலைகள் உங்களை கடிக்கும். அடுத்து சந்தர்பான் காடுகளில் ராயல் பெங்கால் புலி உங்களை வேட்டையாடும். வடக்கு பெங்காலில் யானைகள் உங்களை ஏறி மிதிக்கும்." என்றார். அரசியல் செய்திகள்

Also Read: "என்னால் சேவாக்,சச்சின் போல இருந்திருக்க முடியாது"- தனது உளவியல் பிரச்சனை குறித்து மனம் திறந்த டிராவிட்!