India
இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த உ.பி. முன்னாள் MLA மகன் கைது!
பா.ஜ.க ஆளும் உ.பி-யில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் என பலர் சிக்கின. மேலும் இதுதொடர்பான வழக்கு ஏராளமான விசாரணையின்றி நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மகனை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ரா தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ இருந்துள்ளார்.
அவர் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு என பல வழக்குகள் இருந்துள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விஜய் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து போலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, விஷ்ணு மிஸ்ரா தலைமறைவாகியுள்ளார். மேலும் அவரை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு சன்மான தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் புனேவில் விஷ்ணு மிஸ்ரா தலைமறைவாக இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரை கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!