India

ATM-ல் பணம் எடுக்கும்போது இனி OTP கட்டாயம்.. புதிய விதியை கொண்டுவந்தது SBI.. வாடிக்கையளர்கள் அதிர்ச்சி !

அண்மைக்காலமாக பலரும் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபோவதாக சைபர் கிரைமில் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலரின் ATM கார்டு தொலைந்து விட்டால் கூட எப்படியோ அவரது password-ஐ கண்டுபிடித்து அதிலிருந்தும் சில நவீன திருடர்கள் கொள்ளையடித்து வருவதாக சைபர் கிரைமில் புகார்கள் எழுந்தது.

இது போன்ற சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் SBI வங்கி, விதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ATM-ல் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP எண் வரும். அந்த எண்ணை போட்ட பிறகே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் மற்றொரு முறை பணம் எடுக்க விரும்பினால், அப்போது வாடிக்கையாளர் மொபைல் எண்ணிற்கு வேறொரு OTP எண் வரும். அந்த OTP எண்ணை ATM மிஷின்-ல் பதிவு செய்த பிறகே வடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும்.

இப்படி OTP எண்ணை வைத்து பண பரிவர்த்தனை செய்வதன் மூலம், சைபர் குற்றங்களை குறைக்க இயலும் என்றும், மர்ம நபர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தடுக்கப்படும் என்றும் SBI நிர்வாகம் தெரிவித்துள்ளது.