India

சாலை விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. இறுதி தருணத்தில் பிறந்த குழந்தை: 'இறந்தாலும் வாழவைக்கும் தாய் !'

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியை சேர்ந்தவர் ராமு - காமினி(26) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், காமினி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளன்று காமினி தனது கணவர் ராமுவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருவரும் காட்டு வழியே சென்று கொண்டிருந்த சமயத்தில் அந்த பகுதியல் லாரி ஒன்று வந்துள்ளது.

அப்போது எதிர்பாராத நேரத்தில், காமினி சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில் காமினி - ராமு கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 8 மாத கர்ப்பிணியாக இருந்த காமினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்து கொண்டிருந்த சமயத்தில் அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சில பெண்கள், காமினிக்கு பிரசவம் பார்த்தனர்.

குழந்தை பிறந்ததையடுத்து, காமினி அவரது கணவர் ராமு, குழந்தை ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே காமினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் 8 மாதத்தில் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கணவர் ராமு ஆகியோர் லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 மாத கர்ப்பிணி தனக்கு குழந்தை பிறந்ததும் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இணையத்தில் கிடைத்த இடம்.. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு சுற்றுலா.. நீரில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி!