India
"விவசாயம் செய்ய தெரியாது" என்று சொன்ன கர்ப்பிணி மருமகள்.. ஆத்திரத்தில் மாமியார் செய்த கொடூரம் !
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி பகுதியை அடுத்த அச்சம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (22). இவரும் பக்கத்து ஊரை சேர்ந்த பண்டாரி என்ற என்ற இளைஞரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரின் ஒத்துழைப்போடும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து சில நாட்களிலே, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கீர்த்தனாவை கணவர் பண்டாரி கண்டித்துள்ளார். மேலும் மாமியார் மருமகள் சண்டை காரணமாக, கீர்த்தனாவும், பண்டாரியும் ஐதராபாத் பகுதிக்கு குடியேறினர். அங்கே பண்டாரி டிரைவர் தொழில் செய்து வந்தார். அப்போது கீர்த்தனா இரட்டை குழந்தைகளை கர்ப்பம் தரித்திருந்தார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது மகன் - மருமகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துள்ளார் தாய். மேலும் அவர்களின் விவசாய நிலங்களை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்றும், உடனடியாக இருவரும் இங்கே வரவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி மீண்டும் அச்சம்பேட்டை கிராமத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது மருமகளை விவசாயம் செய்ய வறுபுறுத்தியுள்ளார் மாமியார். மேலும் கீர்த்தனாவை சரமாரியாக வசைபாடியுள்ளார். இதனால் கோபப்பட்ட கீர்த்தனா, எதிர்த்து பதிலுக்கு பதில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார், மருமகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதனால் அலறி துடித்த கீர்த்தனாவின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கீர்த்தனாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வித்தனர். அங்கு இவர் 50% உடல் வெந்த காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து கீர்த்தனாவின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாமியாரை கைது செய்து சிறையில் அடித்தனர். இதனிடையே இந்த சம்பவத்தில் கீர்த்தனாவின் கர்ப்பம் கலைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
4 மாத கர்ப்பிணியான மருமகள் மீது மாமியார் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!