India
"தேசியக் கொடியை ஒருபோதும் BJP, RSS மதித்ததில்லை": பாஜக-வின் சுதந்திர வாரம் கொண்டாட்டம் - அகிலேஷ் கண்டனம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11 முதல் 17ம் தேதி வரை 'சுதந்திர வாரம்' என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதையடுத்து உத்தர பிரதேச பா.ஜ.க அரசின் இந்த பொய்யா தேசபக்திக்குப் பலரும் கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தற்போது திடீரென சுதந்திர தினத்தைக் கையில் எடுப்பது ஏன்? தேசியக் கொடியே மதிக்காதவர்கள் இப்போது சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒருபோதும் தேசியக்கொடியை மதித்ததில்லை என யோகியின் 'சுதந்திர வாரம்' கொண்டாட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு பங்கும் பெறாத இவர்கள் தற்போது தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். சுதந்திர இயக்கத்துடன் துளிகூட தொடர்பு இல்லாத இவர்கள் எப்படி தியாகிகளுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
பா.ஜ.கவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்- சும் ஒரு போதும் தேசியக் கொடியை மதித்ததில்லை. மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே தற்போது சுதந்திர தினத்தைக் கையில் எடுத்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் தொடர்ச்சியாக இந்தியாவில் தேசியக் கொடிக்குப் பதிலாகக் காவிக்கொடியை ஏற்றுவோம் என பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் சுதந்திர வாரம் கொண்டாடப்படுவது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !