India

விதியை மீறி பேனர் வைத்த பாஜக MLA-வுக்கு பாடம் புகட்டிய காங்கிரஸ் பெண் நிர்வாகி!

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றம் விதானா சவுதாவை சுற்றி உள்ள 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைத்து பாஜகவினர் அத்துமீறலில் ஈடுப்பட்டனர். ஏற்கனவே பெங்களூர் நகரில், பேனர் மற்றும் போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தெரிந்தும் பாஜகவினர் பாஜக எம்.எல்.ஏ சி.டி.ரவியின் 55 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எக்கச்சக்க ஃப்ளெக்ஸ் போஸ்டர்களை வைத்துள்ளனர்.இதனை கண்ட காங்கிரஸ் பெண் பிந்து கவுடா கடுப்பாகி பேனரை கிழித்தெறிந்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காங்கிரஸ் தரப்பில் “பெங்களூர் மாநகராட்சியின் அலட்சியமே காரணம், இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்துதான் மீதி உள்ள பேனர்களை எடுத்திருக்கிறார்கள் என்று கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் பாஜக தொண்டர் ஒருவர் பேனரை கிழித்ததற்கு “யாரை கேட்டு கிழித்தார்கள்” என்று பெண்ணிடம் அடாவடியாக பேசியிருக்கிறார்.மேலும் தொடர்ந்து இந்தியிலே பேசியதால் கடுப்பான பெண் “நீ முதல்ல கன்னடம் பேசு’ என்று கேட்டார்.அதற்கு அந்த நபர் ஒழுங்காக பதில் சொல்லாமல் இந்தியிலேயே மழுப்பியிருக்கிறார்.இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பெங்களூருக்கு வந்தபோதும் ​​இதுபோன்ற பேனர்கள் நிறுவப்பட்டன.அப்போது இனிமேல் இதுபோல் நடக்காது என்று பாஜக தலைமையிலான அரசு உறுதியளித்திருந்தது.ஆனால் மீண்டும் இதுபோல் நடந்திருப்பது பாஜக ஆட்சியின் மீதான அவநம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

Also Read: "ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டன் இவர்தான்" - இளம் வீரரை கைகாட்டிய முன்னாள் வீரர்!