India
ரூ. 4-க்கு ஒரு லிட்டர் மாட்டு கோமியம்.. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பூபேல் பாகல் உள்ளார். இந்த மாநிலத்தில் ஏற்கனவே கால்நடைகளின் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து வருகிறது.
இப்படி கொள்முதல் செய்யப்படும் சாணங்களைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு லாபம் ஈட்டி வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பாக ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று தான் கோமியம் கொள் முதல் திட்டம்.
விவசாயிகளிடம் இருந்து மாட்டுச் சாணத்தைக் கொள்முதல் செய்வது போலவே கோமியத்தைக் கொள்முதல் செய்யத் திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்தை ஜூலை 28ம் தேதி அம்மாநில முதல்வர் பூபேஸ் பாகல் தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல் செய்ய அம்மாநில அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்களை விட கூடுதலாகக் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசும் இதைக் கையில் எடுக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!