India
வெளிநாட்டவர்களை குறிவைத்து ஹேக்கிங்.. ரூ.170 கோடியை ஏமாற்றிய கும்பல் அதிரடி கைது! நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கரண் மோகன் மற்றும் வினோத் சிங். இவர்கள் நொய்டா-வில் tech support and tax refunds என்ற பெயரில் 10 பேர் கொண்ட போலி நிறுவனத்தை நடத்தியுள்ளனர். இந்த நிறுவனம், அதிநவீன மென்பொருட்களைப் பயன்படுத்தி வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணினிகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பின்னர் சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு, அந்த தவறுகளை நீக்குவதாக கூறி அதற்கு கட்டணம் வாங்கியுள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இவர்களின் இந்த செயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியபோது மேற்க்கூறிய இணையமோசடி தெரியவந்தது. இந்த மோசடிக்கு மூளையாக இருந்தவர்கள் கரண் மோகன் மற்றும் வினோத் சிங் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் விரைந்து செய்யப்பட்டு மோசடி கும்பலை சேர்ந்த துருவ் நரங், மயங்க் கோகியா, அக்ஷய் மாலிக், தீபக் சிங், அஹுஜா பொட்வால், அக்ஷய் சர்மா, ஜெயந்த் சிங், முகுல் ராவத் உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் யாராருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கூறிய காவல்துறை அதிகாரிகள், 10 பேர் கொண்ட இந்த கும்பலிடமிருந்து 70 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் பல மொபைல் போன்கள், சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளோம். இதுவரை பெறப்பட்ட வங்கி அறிக்கைகளின் பகுப்பாய்வின்படி, இந்த கும்பல் சுமார் ரூ.170 கோடியை ஏமாற்றியுள்ளது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!