India

Voice Note Status : குரல்பதிவையும் இனி Status வைக்கலாம்.. வருகிறது புதிய வாட்சப் அப்டேட் !

நவீன உலகில் மொபைல் போன் என்பது நாம் அனைவருக்கும் இன்றியமைத்ததாக திகழ்கிறது. அதிலும் அண்மைக்காலமாக வாட்சப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளம் நம் வாழ்வில் பெரும்பங்காற்றி வருகிறது.

வாட்சப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதையடுத்து, நாள்தோறும் புது புது அப்டேட்கள் வந்தவண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் வாட்சப் அப்டேட் படி, 'வீடியோ கால் பேசும்பொழுது முகத்திற்கு பதிலாக அவதார் வீடியோ அனிமேஷன்', 'பெண்களுக்காக வாட்சப் பீரியட் ட்ராக்கர்' உள்ளிட்ட சிறப்பம்சங்கள் விரைவில் வரவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆடியோ செய்தியையும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்சப் பயனாளர்கள் தங்களது மன நிலைமையை வாட்சப் ஸ்டேட்டஸ்-ல் வைத்து வெளியிடுவர். ஏற்கனவே புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில், தற்போது ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி இதை வைக்கலாம். அதுமட்டுமின்றி வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று இதையும் வாட்சப் பயனர்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த அப்டேட் வாட்சப் பயனர்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்க முடிகிறது.

Also Read: திமுகவை திட்டி வயிறு வளர்ப்பவர்கள்; பழனிசாமியின் அட்டைகத்தி வீரர்கள் கவனத்திற்கு: TR.பாலு MP எச்சரிக்கை!