India
பள்ளி குழந்தைகளால் முடியும் போது உங்களால் முடியாதா?.. நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு யு.யு.லலித் கேள்வி!
குழந்தைகள் காலை 7 மணிக்குப் பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் 9 மணிக்கு தங்கள் நீதிமன்ற பணியைத் தொடங்க தொடங்க முடியாதா? என உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமான நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இன்று 9.30 மணிக்கே தங்களது வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அப்போது வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி லலித்திடம் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கு முன்பே துவங்கியதற்கான காரணம் ஏன் என வினவியுள்ளார். இதற்குப் பதிலளித்த யு.யு.லலித், குழந்தைகள் காலை 7 மணிக்குப் பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் 9 மணிக்கு தங்கள் நீதிமன்ற பணியைத் தொடங்க தொடங்க முடியாதா?
இப்படி செய்தால் நீதிபதிகளுக்கு மாலையில் அதிக நேரம் கிடைக்கும். நீண்ட நேர விசாரணை தேவைப்படாத வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நேரம் மிகவும் உதவியாக இருக்கும். வருங்காலத்தில் சோதனை முறையில் இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி யு.யு.லலித்தின் கேள்விக்கு மூத்த வழக்கறிஞர்கள் பலர் வரவேற்றுள்ளனர். மேலும் ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து இந்த மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் எனவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!