India
“வாய்ஜாலம்.. சர்வாதிகாரம்.. ஊழல்” : எதிர்க்கட்சிகள் பேசும் வார்த்தைக்கு தடைவிதிக்கும் ஒன்றிய மோடி அரசு !
மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, கொரோனா பாதிப்பு, வேலை இழப்பு, பொருளாதார சரிவு, சமூக செயல்பாட்டாளர் கைது, பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு போன்ற அடுத்ததடுத்த மக்களை பாதிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து எந்தவித கவலையோ வருத்தமோ கொள்ளாத ஒன்றிய அரசுக்கு எதிராக நாடுமுழுவது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறும் வேளையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலம் கூட்டத்தொடர் வரும் 18ந் தேதி தொடங்கும் நிலையில், ஜூலை 17ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற இருஅவைக் கூட்டங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என ஒன்றிய அரசுக்கு எதிராக குற்றங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகள் பேசும் அனைத்து வார்த்தைகளை தடைவிதிக்கும் வகையில் மோடி அரசு இறங்கியுள்ளது.
அதன்படி, “துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்”ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!