India

“ஏன் சங்கி வார்த்தையை தடை பண்ணல.. அப்போ நான் கண்டிப்பா பேசுவேன்”: பாஜகவை கலங்க வைத்த திரிணாமுல் MP-க்கள்!

மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, கொரோனா பாதிப்பு, வேலை இழப்பு, பொருளாதார சரிவு, சமூக செயல்பாட்டாளர் கைது, பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு போன்ற அடுத்ததடுத்த மக்களை பாதிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து எந்தவித கவலையோ வருத்தமோ கொள்ளாத ஒன்றிய அரசுக்கு எதிராக நாடுமுழுவது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறும் வேளையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலம் கூட்டத்தொடர் வரும் 18ந் தேதி தொடங்கும் நிலையில், ஜூலை 17ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற இருஅவைக் கூட்டங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என ஒன்றிய அரசுக்கு எதிராக குற்றங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகள் பேசும் அனைத்து வார்த்தைகளை தடைவிதிக்கும் வகையில் மோடி அரசு இறங்கியுள்ளது.

அதன்படி, “துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்”ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவரிசையில் மோடி அரசின் மோசமான நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசு தடைவிக்கும் அத்தனை வார்த்தைகளையும் நான் பேசுவேன் என டெரிக் ஓ பிரைன் எம்.பி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒன்றிய அரசு தடை விதித்துள்ள அனைத்து வார்த்தைகளையும் நான் நாடாளுமன்ற அவையில் நிச்சயம் பேசுவேன். என்னை கைது செய்து கொள்ளலாம்” என கொந்தளித்துள்ளார்.

மேலும் சங்கி என்ற வார்த்தையை மட்டும் பட்டியலில் இல்லையே என மற்றொரு எம்.பி மஹுவா மொய்த்ரா சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில், “பா.ஜ.க எவ்வாறு இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து பேசும்போது, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் ‘சங்கி’ என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “வாய்ஜாலம்.. சர்வாதிகாரம்.. ஊழல்” : எதிர்க்கட்சிகள் பேசும் வார்த்தைக்கு தடைவிதிக்கும் ஒன்றிய மோடி அரசு !