India
வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நிர்மலா யாதவ் (வயது 32) என்ற பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சோலாப்பூர் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தது கண்டனங்கள் எழுந்தது.
இதையடுத்து, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நிர்மலா யாதவுக்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாகவும் காவல்துறையில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் நிர்மலா யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து, FIR பதிந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க துணைத் தலைவர் சித்ரா வாக் கூறுகையில், "ஸ்ரீகாந்த் தேஷ்முக் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், அவரை நாங்கள் பதவி விலக அறிவுறுத்தினோம்.
அதன்படி அவரும் ராஜினாமா செய்ததையடுத்து, கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு முன்னாள் பாஜக நிர்வாகியான கே.டி.ராகவன் இது போன்ற பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிரா பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மர்மமான முறையில் பெற்ற வெற்றியை மோடி சொந்தம் கொண்டாட முடியாது! : முரசொலி தலையங்கம்!
-
“அரசியலின் அதிசயம்.. தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பெற்றவர்”: வி.பி.சிங் நினைவு தின சிறப்புக் கட்டுரை!
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?