India
“ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச் சொல்லி இஸ்லாமியரை மிரட்டிய இந்துத்வா அமைப்பாளர்.. உ.பி-யில் தொடரும் அராஜகம் !
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் இந்துத்வா அமைப்பை சேர்ந்த ஒருவர், இஸ்லாமியரை ஒருவரை பிடித்து 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கி ஜெய்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்ப வறுபுறுத்தியுள்ளார்.
இதையடுத்து தனியாக மாட்டிக்கொண்ட அந்த இஸ்லாமியர், எங்கே அந்த நபர் தன்னை கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் வேறு வழியில்லாமல், அவர் கூறிய கோஷங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த திங்கட்கிழமை முபின் முகமது என்ற இஸ்லாமியர் ஒருவர், தனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்காக தீவனம் தேடி அழைந்துள்ளார்.
அப்போது வழியில் அவரை மடக்கிய ஜிதேந்திர என்ற இந்துத்வா அமைப்பாளர், முபின் முகமதுவை கோஷம் எழுப்ப வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் புகார் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் யார் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர்களது மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட முபின் முகமது கூறுகையில், "எனது கிராமத்தில் சகோதரத்துவ உணர்வைப் பேண வேண்டும் என்பதற்காக, என்னை வற்புறுத்தி எழுப்ப வாய்த்த கோஷங்களையும் நான் மறுக்காமல் கேட்டேன். ஆனால் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டது தவறான செயல். அதனால் தான் நான் அவர்கள் மீது காவல்துறையில் புகாரளித்தேன்" என்றார்.
இந்தியாவில் பாஜக ஆட்சி தொடங்கிய நாளில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது நடக்கும் அடக்குமுறை, வன்முறைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், மேலும் மேலும் அது தொடர்கதையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை உலக அளவில் பேசப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தை குறித்து தவறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு இஸ்லாமிய தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இப்படி பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாஜக நாள்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!