India
“எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்க பாத்தியா..” : Map பார்த்து கார் ஓட்டிய நபர் - வயலுக்குள் சிக்கிய கார்!
நவீன உலகில் எல்லாமே நவீனத்தின் பின்னணியில் தான் நடக்கிறது. நாமும் தற்போது அந்த நவீனத்திற்கு பின்னால் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். அந்த நவீனத்தில் பிரதமான ஒன்று தான் கூகுள். இது சமீபத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்திய ஒரு இணையம் தான் கூகுள் மேப்.
இந்த மேப் மூலம் நாம் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் சில சமயங்களில் இது தவறான வழிகளையும் காட்டுகிறது. அதற்கு உதாரணமாக தான் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள ஒரு குடும்பத்தினர், பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரியான வழி தேடி, கார் ஓட்டும் நபர் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். அது காட்டும் திசையை நம்பி இரவு முழுவதும் காரை ஓட்டியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கார், பாலச்சிரா என்ற பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் அந்த கார் இறங்கியது. இதையடுத்து என்ன செய்வதென்று திகைத்த குடும்பத்தினர், காரை விட்டு இறங்கி, காரை இழுக்க முயற்சித்தனர். ஆனால் அது இரவு நேரம் என்பதால், காரை வெளியே எடுக்க இயலவில்லை.
எனவே காரை அங்கேயே விட்டுவிட்டு, இவர்கள் அனைவரும் சாலைக்கு நடந்து சென்று வேறு வாகனத்தை பிடித்து சென்றனர். இதையடுத்து மறுநாள் காலை, அந்த பகுதிக்கு வந்த அந்த குடும்பத்தினர், ஊர் மக்களின் உதவியோடு வயலில் இருந்த காரை கயிறுகட்டி இழுத்து மீட்டனர். ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ள நிலையில், இந்த சம்பவமும் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !