India
“பந்தயத்துக்கு நாங்க வரலாமா?” - 8 கிலோ சமோசா.. ஜெயிச்சா ரூ.50,000 பரிசு.. எங்க தெரியுமா ?
சமோசா என்றால் வட இந்தியர்களிடையே விருப்பமான ஒரு உணவு பண்டமாகும். இதனை சூடாக சாப்பிடுவதில் அவர்களுக்கு இணை அவர்கள் தான். முக்கோண வடிவில் காணப்படும் சமோசா, மசாலா கலவை நிறைந்தவையாகும்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் இருக்கும் குர்தி பஸாரில் 'கெளஷல் ஸ்வீட்ஸ்' என்று ஒரு கடை உள்ளது. இந்த கடையில் தற்போது சமோசா பிரியர்களுக்கிடையே போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது அவர் கடையில் உள்ள ஒரே ஒரு சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட வேண்டுமென்றும், அப்படி சாப்பிட்டால் அவர்களுக்குபரிசு தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அடடே.. ஒரே ஒரு சமோசா தானா என்று எண்ண வேண்டாம். அந்த ஒரு சமோசாவானது 8 கிராம் இல்லை, 8 கிலோ கிராம். அந்த ஸ்வீட் கடையில் 8 கிலோ எடையுள்ள சமோசா தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பெயர் 'பாகுபலி சமோசா'. இந்த சமோசாவை சுமார் 30 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை வழிபடுவதாக அந்த கடை உரிமையாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த கடையில் கூட்டம் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.
இது குறித்து அந்த ஸ்வீட் கடை உரிமையாளர் சுபம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நாங்கள் இந்த சமோசா கடையை பிரபல படுத்த வேண்டும் என்று எண்ணினோம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தபோது, பெரிய சமோசா செய்ய முடிவெடுத்தோம். அதன்படி முதலில் 4 கிலோ எடையுள்ள சமோசாவை தயாரித்தோம். பின்னர் அதை 8 கிலோவாக மாற்றினோம். இந்த சமோசாவின் பெயர் 'பாகுபலி சமோசா'. இந்த சமோசாவின் விலை ரூ.1,100 ஆகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறோம். இதனால் எங்களது கடைக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதுவரை இந்த சமோசாவை யாரும் சாப்பிட்டு முடிக்கவில்லை. தற்போது 10 கிலோ சமோசாவை தயாரிக்க நங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கூறினார்.
இந்த செய்தியை பார்க்கும் போது, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் வரும் பரோட்டா போட்டி தான் நினைவுக்கு வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!