India
பெற்ற மகனை கடத்திச் சென்ற தந்தை.. இரண்டு மாநில போலிஸூக்கு அலர்ட் - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
சத்திஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஹிமாலயன் ஹைட்ஸ் காலனியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். சிறுவனை அனைத்து பகுதிகளிலும் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் இது தொடர்பான அவரது தாய் போலிஸில் புகார் அளித்துள்ளார். உடனே வழக்கு பதிவு செய்த போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையின் தந்தை டைனிக் பாஸ்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் சிறுவன் கொண்டுபோகப்பட்டது தெரியவந்தது.
பின்னர் போலிஸார் சிறுவனின் தாயாரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், கருத்து வேறுபாடு காரணமாக சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்வது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் குழந்தையின் தந்தை மீது சந்தேகம் இருப்பதாக குழந்தையின் தாய் மாமா போலிஸாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவன் தந்தை இதற்கு முன்பே இதுபோன்ற சிறுவனை கடத்த முயன்றதாகவும் தயார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் போலிஸார் சிறுவனின் தந்தையை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக சிறுவனையும் போலிஸாரால் கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிறுவனின் தந்தை சிறுவனோடு மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதனால் மத்திய பிரதேசத்துக்கு போலிஸ் படை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சத்திஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்