India
லாக்கரை உடைத்து 8 கிலோ தங்கம் கொள்ளை : தெலங்கானாவில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் !
தெலங்கானாவில், முகமூடி அணி வந்து வங்கி லாக்கரை உடைத்து 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியில், புஸ்ஸாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் புறநகரில் அமைந்துள்ளது 'தெலுங்கானா கிராமீனா வங்கி'. இந்த வங்கியில் நேற்று சுமார் 8.3 கிலோ எடையுள்ள தங்கத்தை முகமூடி அணிந்த திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தங்கத்தின் விலை சுமார் ரூ. 4.15 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது.
Also Read: மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் : மாப்பிள்ளையை விருந்து அழைத்து எரித்துக் கொன்ற மாமனார்!
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெலங்கானா காவல்துறையினர் கூறுகையில், " வங்கியை கொள்ளையடித்த கொள்ளையர்கள், வங்கியின் இரும்பு பெட்டகத்தை வெட்ட இரண்டு எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அதிலிருந்த ரூ. 4.15 கோடி மதிப்புள்ள 8.3 கிலோ தங்க நகைகளையும், ரூ. 7.30 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய காவல்துறையினர், " கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வங்கியில் இருந்த அலராத்தின் ஒயர்களை அறுத்தும், தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பல ஆவணங்கள் மற்றும் கரன்சி நோட்டுகள் எரிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கம் அனைத்தும் வாடிக்கையாளர்களால் டெபாசிட் தங்கம். இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது." என்றும் கூறினர்.
ஏற்கனவே நடந்த ஏ.டி.எம். திருட்டிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வங்கியிலுள்ள பணம் கொள்ளை போன சம்பவம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !