India
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவர், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார்.
இரண்டு நாட்களுக்கு முன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டலை ஆய்வு செய்து, மணிக்கூட்டனுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதைத் தொடர்ந்து, தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது ஹோட்டலுக்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை செய்து மணிக்கூட்டனுக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததோடு, ஹோட்டலையும் தற்காலிகமாக இழுத்து மூடினர். இதனால் மணிக்கூட்டன் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் நேற்று ஹோட்டலை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்த நிலையில், ஹோட்டல் ஊழியர் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது மணிக்குட்டன், அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து குடும்பத்தில் இருந்த மற்றவர்களை தேடும்போது, அவர்கள் 4 பெரும் விஷம் அருந்தி மற்ற அறையில் உள்ள தரையில் விழுந்து கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இறந்து கிடந்த 5 பேரின் உடலையும் மீது உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிக்குட்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், எனவே நிறைய கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மணிக்குட்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!