India

துரோகத்தால் நடந்த ஆட்சி மாற்றம்.. யார் இந்த ஏக்நாத் ஷிண்டே,தேவேந்திர பட்னாவிஸ் ?

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஏக்நாத் ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் இணைந்து இரு முறை தானே மாநகராட்சியின் உறுப்பினராக பதிவு வகித்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார். அடுத்த ஆண்டே சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

பின்னர் 2009, 2014 சட்டமன்ற சட்டமன்ற தேர்தலில் வென்ற அவர் 2014ம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் 2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான `மகா விகாஸ் அகாதி' கூட்டணி அமைந்தபோது மீண்டும் அமைச்சரானார்.

உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த இவர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது துரோகியாக மாறி தொடர்ச்சியாகக் கட்சி நிர்வாகிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்து கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டார். இந்த நிலையில்தான் எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை உடைத்து தற்போது முதலமைச்சராகியுள்ளார்.

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பின்னணி என்ன?

1990-களில் பா.ஜ.க-வில் இணைந்த இவர் பா.ஜ.க மாணவரணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இவர் நாக்பூர் மாநகராட்சியின் இளம் மேயராக திகழ்ந்தார்.

1999-ஆம் ஆண்டு நாக்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தற்போது வரை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக செயல்பட்டு வருகிறார். 2014-ஆம் ஆண்டு சிவசேனா ஆதரவோடு பாஜக ஆட்சியமைத்த நிலையில் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

பின்னர் 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக குறுகிய காலத்தில் முதல்வராக இருந்த பட்னாவிஸ் பின்னர் அரசுக்கு பெரும்பாண்மை இல்லாத சூழலில் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Also Read: "கடத்தல் அரசியல் செய்வது, பணம் கொடுத்து MLAக்கள் வாங்குவதுதான் BJP பழக்கம்" -யஷ்வந்த் சின்ஹா காட்டம்!