India
சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது விவகாரம் : இந்துத்வா சின்னமாகமாறிய பிரதமர் மோடி - ஆங்கில நாளேடு சாடல்!
சமூக ஆர்வலர் டீ ஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டது கோத்ராவை கொதிக்க வைத்துள்ளது என்றும், கோத்ராவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தால், இந்தத் தேசத்தின் ஆன்மாவில் ஆழமானதொரு வடுவை ஏற்படுத்திவிட்டது என்றும் குறிப்பிட்டு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில் (28.6.2022) வெளியான தலையங்கம் வருமாறு :-
2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவத்திற்கும் பிந்தைய காலத்தில் ஒரு பெரிய சதிக்கான சாத்தியக் கூறுகளை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்ட பிறகு, குஜராத் காவல் துறை ஒடுக்கு முறையைத் தொடங்கி - எல்லையைக் கடந்து சென்று விட்டது.
அரசியல் ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி (டி.ஜி.பி.) ஆகியோரை குஜராத் காவல் துறை கைது செய்தது. அத்துடன் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய்பட் மீது வழக்குத்தொடர முற்பட்டதுடன், நீதிமன்றக் கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
நீதிமன்றத்தின் முன்உள்ள அடிப்படை கேள்வி!
நீதிமன்றத்தின் முன் உள்ள அடிப்படை கேள்வி, 59 கரசேவகர்களைக் கொன்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்ட அன்றைய தினத்தில், அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் அப்போதைய குஜராத் முதலமைச் சராக இருந்தநரேந்திரமோடி, ‘மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தங்களின் கோபத்தை வெளிப்படுத்த இந்துக்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தாரா? என்பதுதான்.
மோடி அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவ்வாறு கூறியதாக சஞ்சய் பட் குற்றம் சாட்டி னார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு அமைப்போ (ளுஐகூ) அந்த சமயத்தில் மோடி வேறு இடத்தில் இருந்தார் என்று குறிப்பிட்டு, அதற்கான தடய வியல் ஆதாரங்களை தேடி அலைந்தது.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் யூகம் !
மோடிக்கு எதிரான பொய்யானதொரு வழக்கை உருவாக்குவதற்காகவே சஞ்சய்பட்டின் கூற்று மற்றவர்களால் மிகைப் படுத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு யூகித்தது. சட்டம் - ஒழுங்கு சிறிது காலம் பராமரிக்கத் தவறியதை, அரசியல் சாசன நெறிமுறையை தோற்கடிப்பதற்கான உயர்மட்ட சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகப்பார்க்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, குல்பர்க்சங்க கலவரத்திற்கும் பின்புலமாக பெரிய தொரு சதி எதுவும் இல்லை என்கிற சிறப்புப் புலனாய்வு அமைப்பின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தேச ஆன்மாவில் ஆழமான வடு!
கோத்ராவில் நடைபெற்ற வன்முறைக்குப் பின் நடைபெற்ற வகுப்புவாதக் கொடூரம் குஜராத் மாநில இதயத்தையே கிழித்து விட்டதுடன், இந்த தேசத்தின் ஆன்மாவில் ஆழமானதொரு வடுவை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முதலமைச்சராக மோடி இருந்த போது, இச்சம்பவம் நடைபெற்றதால், மனிதாபி மானத்துக்கு ஏற்பட்ட பெருத்த இடி இது என்ப தோடு, மோடியின் வாழ்க்கைக்கும், ஏற்பட்ட கறையாகும். ஆனால், உறுதியான ஆதாரம் ஏதும் இல்லாமல், அவர் அப்போது சூழ் நிலையை மேற்கொண்ட விதத்திற்கு உள்நோக்கங்களை மேற்கொள்ள முடியவில்லை.
இந்துத்துவா சின்னமாகமாறிவிட்ட மோடி!
மோடி அதிகாரத்தில் இருப்பதால் தப்பிப் பிழைத்தார். வெளிப்புறஅழுத்தங்களையும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான உள் கட்சி அழுத்தங்களை எதிர்த்த நிலையில் ஒரு இந்துத்துவா சின்னமாகவே மோடி மாறி விட்டார். இப்போதைக்கு சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும் பிறரை பின் தொடர்வதற்கான விருப்பத்தை பா.ஜ.க. பயன்படுத்த வில்லை என்றால், அது குணப்படுத்துகிற செயல்முறைக்கு உதவி இருக்கக்கூடும். அத்துடன் அதற்கான பேச்சையும் மாற்றி இருக்கும்.
ஆம்! மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல், கண்ணுக்கு கண் இந்த ஒட்டுமொத்த உலகையேகுருடாக்கும். இவ்வாறு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ’தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!