India
“குழந்தை வளர்ப்பு பெண்களுக்கான பொறுப்பு மட்டுமல்ல..” : இனி ஆண்கள் கழிப்பறையிலும் ‘Diaper Change’ வசதி !
இந்தியாவில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. அதன்படி சலுகைகள், பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தை வளர்ப்பதில் மனைவிக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு கணவருக்கு இருப்பதை உணர்த்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்தில், ஆண்கள் கழிப்பறையில் 'Diaper Change' (டயப்பர்) என்று புதிதாக ஒரு வசதியை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அதன் மூலம் தாய்மார்கள் மட்டுமல்லாமல் தற்போது தந்தைமார்களுக்கும் குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடும் வகையில் உள்ளது. அதாவது தாய்மார்களிடம் மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு, தந்தைமார்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இது கட்டாயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. குழந்தை வளர்ப்பு பெண்களுக்கான பொறுப்பு மட்டுமல்ல” எனக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வரவேற்பை பெற்று வருகிறது.
சில முற்போக்குவாத சிந்தனையாளர்கள் கூட குழந்தையின் டயப்பரை மாற்றுவதற்கு கூச்சப்பட்டு, எதாவது சாக்குப்போக்கு சொல்லி தப்பிக்க நினைப்பார்கள். ஆனால் இனி அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!