India
“இடஒதுக்கீடு என்பது யாசகம் அல்ல.. அது அரசியல் சாசன உரிமை” : பா.ஜ.க கும்பலுக்கு பாடம் எடுத்த சித்தராமையா!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் என்பவர், எழுதிய புத்தக வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 'மித் & ரியாலிட்டி' என்ற பெயர் கொண்ட அந்த புத்தகம், இந்தியாவில் உள்ள இடஒதுக்கீடு பற்றியது. இந்த விழாவில் பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்ட நிலையில், கர்நாடகா மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், சமூகத்தில் நடைபெறும் அவலங்களையும், இடஒதுக்கீட்டின் அத்தியாவசியத்தையும் பற்றி பேசினார். மேலும் சமூகத்தில் நிலவி வரும் சாதிய அமைப்புமுறை குறித்தும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " கடந்த காலத்தில் கல்வி, அதிகாரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதும் ஒரு இடஒதுக்கீடு தானே?. அப்போது சூத்திரர்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உழைத்து உற்பத்தி செய்த பொருட்களை அனுபவிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இது பெரும் அநீதி அல்லவா!. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாக்க சமூகத்தில் சாதி அமைப்பு தொடர்ந்தது. இது சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்தியது.
அந்த காலத்தில் நிலவியது எழுதப்படாத இடஒதுக்கீடு. இதை கொண்டு வந்தவர்கள் யார்? வளங்களை அனுபவித்தவர்கள் யார்? சமூகத்தில் சாதிய அமைப்புமுறையை கொண்டு வந்தவர்கள்தான், இப்போது இடஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடரும் என்று கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஏன் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்? என்று கேட்கின்றனர். கல்வி, அதிகாரம் என அனைத்தும் ஒரு சாதியினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
அம்பேத்கர் இல்லையென்றால், அரசியல் சாசனம் எழுதியிருக்க முடியுமா? இடஒதுக்கீடு என்பது யாசகம் அல்ல; அது நமது அரசியல் சாசன உரிமை. 1955-ல் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தோம். இன்னும் அமைதியாக இருந்தால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. சுயமரியாதை இருந்தால்தான் நாம் மரியாதையாக வாழ முடியும்" என்று ஆவேசமாக பேசினார்.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!