India

இரண்டு வருடம் காத்திருந்த பகை.. ஊருக்கு திரும்பியதும் கொல்லப்பட்ட தம்பதிகள்! சம்பவத்தின் பின்னணி என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் அருகே உள்ள தேவசைனி என்ற கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சகுந்தலா என்ற பெண் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் பக்கத்து வீட்டு காரர் ஜகேந்திரா மற்றும் அவரது மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஜகேந்திராவின் குடும்பம் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஜகேந்திரா மற்றும் அவரது மகன்கள் ஜாமினில் சிறையில் இருந்து வெளி வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கிராமத்துக்கு திரும்ப முடிவு செய்த அவர்கள் அதன்படி தேவசைனி கிராமத்துக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கும் கொல்லப்பட்ட சகுந்தலா என்பவரின் குடும்பத்தோடு மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சகுந்தலாவின் குடும்பத்தினர் ஆறு பேர் திரண்டு வந்து கம்பிகள், கற்கள் மற்றும் தடிகளால் ஜகேந்திரா மற்றும் அவரது மனைவியை அடித்து கொலை செய்துள்ளனர். அப்போது இதை தடுக்க வந்த ஜகேந்திராவின் மகன்களும் இதில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஜகேந்திர பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது மனைவி சர்வேஷ் தேவி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மகன்கள் 3 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இரு குடும்பத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில் 2 வருடங்கள் காத்திருந்து பலி வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: WWE-ல் 20 வருடங்களைக் கடந்த JOHN CENA : மரியாதை செய்ய களத்தில் இறங்கும் 90's கிட்ஸின் WWE ஸ்டார்கள்!