India
"பா.ஜ.க ஆட்சியில் இந்துக்கள் விரட்டப்படுகின்றனர்.. இதுதான் மோடியின் மகாசக்தியா?" - சிவசேனா தாக்கு!
மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத கட்சிகள் இணைத்து மஹா விலாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத் சென்று பின் அங்கிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். தற்போதைய நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 39 எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருப்பதாக பலர் விமர்சித்து வந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் பேசிய அவர், ந்மது சுக துக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்குதான். ஒரு தேசிய கட்சி.. "மகாசக்தி". உங்களுக்கு தெரியும், அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தினர். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளனர்" எனக் கூறினார்.
இதில் அவர் கூறியிருப்பது மோடியைத்தான் எனவும், பாஜக ஆதரவு தனக்கு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுத்தன.
இந்த சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா பாஜகவை விமர்சித்துள்ளது. , அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இருக்கும் அசாம் நட்சத்திர ஹோட்டலை யோகா முகாம் என பகடி செய்துள்ள சாம்னா, "யோகா கும்பலின் தலைவர் பாஜக பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்ததாக கூறுகிறார். அதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார்கள்? காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்கிறது. இந்து பண்டிட்டுகள் கொல்லப்படுகின்றனர். இந்துத்துவா அரசு என்றும் கூறும் பாஜக ஆட்சியில் இந்துக்கள் விரட்டப்படுகின்றனர். இதுதான் உங்கள் மகாசக்தியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்வாறு பா.ஜ.க -சிவசேனா மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் வரும் 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த 16 எம்.எல்.ஏக்கள் கட்சி பெயரை பயன்படுத்த தடை விதித்து சிவசேனா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Also Read
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !